மின்கட்டணம் அதிகரிக்கப்படுமா – இன்று தீர்க்கமான முடிவு

அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (09) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் மின்சாரக் கட்டணத்தை திருத்துவது தொடர்பான இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளது.

கடந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட மின் கட்டண திருத்த யோசனை தொடர்பில் அமைச்சர்களின் கருத்துகளைப் பெறும் நோக்கில் ஒரு வாரம் கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், யோசனைக்கு அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைக்கும் என்று நம்புவதாக வலுச்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்பார்க்கப்படும் வகையில் மின் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி கிடைத்து, மின் உற்பத்தி நிலையங்களுக்கான மூலப்பொருட்கள் கிடைக்குமாயின் எதிர்வரும் காலங்களில் மின் துண்டிப்பின்றி தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என்று எதிர்பார்ப்பதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

கட்டணத் திருத்தம் தொடர்பான அறிவுறுத்தல்களை அமைச்சரவைக்கு அனுப்பி வைத்துள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான நடைமுறைகள் சட்டத்தில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, 4 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் மின் கட்டண உயர்வுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்று வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews