லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைகள் தொடர்பான அறிவிப்பு!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் 201 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 4,409 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாவினாலும், 2.3 கிலோ கிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 38 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 5 கிலோகிராம் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 1770 ரூபாவாகவும், 2.5 கிலோகிராம் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 822 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews