யாழ்.மாவட்டத்தில் மோசமாகும் நிலைமை! மாவட்டத்தில் 318 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. |

யாழ்.மாவட்டத்தில் 318 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். நேற்று முன்தினம் 239 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் நேற்றய நிலவம் தொடர்பாக கேட்டபோதே மாவட்டச் செயலர் 318 பேருக்கு தொற்று உறுதியானதாக கூறியுள்ளார். இதேவேளை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 11 அயிரத்த்து 112 ஆக உயர்ந்திருக்கின்றது. நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வரும் நிலையில் யாழ்.மாவட்டத்திலும் இவ்வாறு சடுதியாக அதிகரித்துச் செல்வது பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும். ஆகவே மக்கள் தமது பாதுகாப்பையும் சமூகத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் முகமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வீடுகளிலே சுயமாக முடங்குவது தொற்றுப் பரவுவதை ஓரளவேனும் கட்டுப்படுத்த உதவும் என மாவட்ட செயலர் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews