
ஜனவரி மாதத்தில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் விதத்தில் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டால் முறைப்பாடுகள் இல்லாமலேயே இந்த விவகாரத்தில் தலையிட தயார் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்கனவே பெரும் சிரமப்படும் மக்களை மேலும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் உரிமை அரசாங்கத்திற்கோ அதன் பங்குதாரர்களிற்கோ கிடையாது என்றும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் இயக்குநர் நிகால் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.