நாட்டின் வறுமை நிலைமை தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சபையில் கேள்வி

நாட்டில் வறுமை நிலைமையை முழுமையாக அறிந்துகொள்வதற்கான கணிப்பை அரசாங்கம் எப்போது மேற்கொள்ளப்போகின்றது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குடும்ப சுகாதார பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலமாக இந்த நாட்டில் போசணை பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

அதன் மூலம் ஒவ்வொரு மாவட்ட அடிப்படையிலும் அரச மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கக்கூடிய வேலைத்திட்டங்களை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதா?

போசாக்கு இன்மை காரணமாக 5 வயதுக்கும் குறைந்த குழந்தைகள், அந்த குடும்பங்களுக்கு தேவையான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதா?

அவ்வாறு முன்னெடுக்குமாயின் அந்த வேலைத்திட்டங்கள் எவை?

நாட்டில் பெரும்பாலான மக்கள் இன்று வறுமை நிலைமைக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இந்த மக்களுக்கு அரசாங்கம் என்ன செய்ய போகின்றது என்பது தொடர்பில் ஒரு தெளிவான பதிலை அரசாங்கத்திடமிருந்து நாம் எதிர்பார்க்கின்றோம்.

இதற்கு பதிலளித்த ஆளுங்கட்சியின் பிரதம கொறடா சுசில் பிரேம ஜயந்த,

எதிர்க் கட்சித் தலைவரினால் இன்றைய தினம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எதிர்வரும் காலப்பகுதியில் நான் பதிலளிப்பேன் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

இது தொடர்பிலான புள்ளிவிவரங்கள், தகவல்களை உரிய முறையில் தயார் செய்து தெளிவாக விளக்குவதற்கு நான் எதிர்பார்த்துள்ளேன்.

இதன்போது மீண்டும் எழுந்து கருத்துரைத்த எதிர்க் கட்சித் தலைவர்,

பாராளுமன்றத்தின் சம்பிரதாயத்துக்கு அமைவாக வினாவொன்றை எழுப்பும்போது அதற்கு பதிலளிப்பதற்காக நேரம் காலத்தை எடுத்துக்கொள்வதற்கு நாங்கள் எதிர்ப்பை தெரிவித்ததில்லை.

அது நியாயமான விடயமாகும்.

இருப்பினும் நான் இந்த வினாவை வறுமை தொடர்பிலேயே ஆற்றுப்படுத்தியுள்ளேன்.

வறுமை தொடர்பில் முழுமையாக தகவல்கள், புள்ளிவிவரங்கள் இல்லை என்றால் வரவு- செலவு திட்டத்தை சமர்ப்பிக்க முடியாது.

வரவு -செலவு திட்டத்தின் இறுதித் தீனமாகும் இன்றைய இறுதி தினத்தில் நாட்டின் வறுமை, போஷhக்கு, வறுமை நிலைமைக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற மறுசீரமைப்பு தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு எதிர்காலத்தில் பதிலளிப்பதாகக் கூறப்படுகின்றது.

இந்த பதிலானது மிகவும் அநீதியான பதிலாகும்.

Recommended For You

About the Author: Editor Elukainews