பிரதான வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு

பிரதான வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாட்டு நிலை காணப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைகளில் நிலவி வரும் நெருக்கடி நிலைக்கு தற்காலிக தீர்வு வழங்குவதில் பயனில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மருந்துப் பொருள் தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு துரித கதியில் தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும், இது தொடர்பில் தமது சங்கம் முன்வைத்த யோசனைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

புற்று நோய், தொற்றா நோய், வலி நிவாரணி, மயக்க மருந்து உள்ளிட்ட சுமார் 160 அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த மருந்துப் பொருட்கள் அனைத்து களஞ்சியசாலைகளில் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மருந்துப் பொருட்கள் தொடர்பில் நீண்ட கால திட்டங்கள் அரசாங்கத்திடம் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து மருந்துப் பொருள் உதவிகள் கிடைக்கப் பெற்றாலும், நீண்ட கால அடிப்படையில் மருந்துப் பொருள் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென டொக்டர் ஹரித அலுத்கே தெற்கு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews