யாழில் போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்த கல்வி திணைக்களத்தின் ஒத்துழைப்பு போதாது!

யாழில் போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு கல்வித்திணைக்களம் பூரண ஒத்துழைப்பு வழங்குவதில்லை என சாவகச்சேரி வைத்திய சாலை வைத்திய நிபுணர் அ,வினோதா தெரிவித்தார்

யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற போதை பொருள் கட்டுப்படுத்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

நீண்ட காலமாக போதை பொருள் பாவனை தொடர்பில் பல கூட்டங்கள் இடம் பெறுகின்ற போதிலும் அந்த கூட்டங்களுக்கு கல்வி திணைக்கள அதிகாரிகள் வருவதில்லை அதே போல் பாடசாலைகளில் இருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கின்றன ஆனால் அந்த முறைப்பாடுகளுக்குரிய நடவடிக்கைகள் கல்வித் திணைக்களத்தினர் எடுக்கப்படுவதில்லை

பாடசாலை மட்டங்கள் இடம்பெறும் போதைப்பொருள் செயற்பாடுகளுக்கு கல்வி திணைக்களத்தினர் கட்டாயமாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோல் வழமையாக மாவட்ட செயலக கூட்டங்களுக்கு கூட அதிகாரிகள் வருவதில்லை ஆனால் இன்றைய கூட்டத்திற்கு கல்வி திணைக்கள அதிகாரிகள் வந்துள்ளார்கள் அது வரவேற்கக்கப்பட வேண்டிய விடயம் குறிப்பாக பாடசாலை மட்டங்களில் போதைப் பொருள் தொடர்பான விடயங்கள் தொடர்பில் கல்வி திணைக்களம் கட்டாயமம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஆனால் அந்த கல்வித் துறையினர் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை எனவே போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு கல்வி அதிகாரிகள் கட்டாயமாக ஒத்துழைப்பு வழங்கினால் மாத்திரமே இந்த பாடசாலை மட்டங்களில் உள்ள போதைப் பொருள் விடயங்களை கட்டுப்படுத்த முடியும் குறிப்பாக பாடசாலை மட்டங்களில் நடவடிக்கை எடுப்பதற்கு கல்வித்திணைக்களம் தடையாக உள்ளமை தொடர்பிலும் பலமுறைபாடுகள் கிடைக்கப்பட்டுள்ளன எனவே குறித்து கல்வி திணைக்கள உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கவும்,

Recommended For You

About the Author: Editor Elukainews