தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்

வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்திருந்த தங்கத்தின் விலை, தற்போது படிப்படியாக குறை வடைந்து வருகிறது.

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 6,34,708 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலைசிறிதளவு உயர்ந்து வருகிறது. இலங்கையில், தங்க நிலவரத் தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 1,79,150 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 1,64,200 ரூபாவாக இருந்தது.

இந்நிலையில்,21 கரட் தங்கப் பவுண் ஒன்று 1,56,750 ரூபாவாக நேற்று பதிவாகியுள்ளது. எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றம் பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 2,00,000 ரூபாவை எட்டியிருந்தது.

எனினும், அடுத்து வந்த சில நாட்களில் 20 தொடக்கம் 40 ஆயிரம் ரூபாவால் தங்கத்தின் விலை குறைவடைந்து, தற்போது 1,60,000 ரூபாவை அண்மித்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews