கிளிநொச்சி இந்து ஆரம்ப வித்தியாலயத்தின் புதிய கட்டிடம் திறப்பு!

கிளிநொச்சி தெற்கு  கல்வி வலயத்தின் கிழவுள்ள  இந்து ஆரம்ப வித்தியாலயத்தின் புதிய கட்டிடம் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் அவர்களினால் இன்று (17.11.2022) காலை 8.30 மணிக்கு மாணவர்களின் செயற்பாட்டுக்காக  கையளிக்கப்பட்டது.
கொரியா நாட்டின் நிதியில் கொய்க்கா திட்டத்தினூடாக  அமைக்கப்பட்ட புதிய கட்டிடமே இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன் நிகழ்வில் மாகாண கல்விப்பணிப்பாளர் உதயகுமார். கிளிநொச்சி தெற்கு  கல்வி வலயக் கல்விப்பணிப்பாளர் கமல்ராஜா. பாடசாலையின் முதல்வர்.ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

Recommended For You

About the Author: Editor Elukainews