பொருளாதார சிக்கலை சமாளிப்பதற்க்கு தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீரதவு வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்….!

பொருளாதார சிக்கலை சமாளிப்பதற்க்கு முதலிலே தமிழ் தேசிய பிரச்சினைக்கு ஒழுங்கான ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என ஐநா அரசியல் குழுவிடம் தெரிவித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருகான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்திய சாலைக்கு மருத்துவ பொருட்கள் வழங்கிவைத்த பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
விசேடமாக இலங்கையில் இருக்கின்ற  அரசியல் நிலைமை குறித்து  ஆரயவே இந்த அரசியல் குழு இங்கு வந்திருக்கின்றது.
இலங்கையிலே அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டதற்க்கு ப பின்னர் முதன் முதலாக வந்த குழுவாக இருக்கின்றனர். அவர்களிடத்திலே நாங்கள் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பதன் விளைவுகள் இப்படி வெவ்வேறு விதமாக பிரதிபலிப்பதை எடுத்துச் சொல்லியிருக்கிறோம்.
இந்த பொருளாதார சிக்கலை சமாளிப்பதற்க்கு முதலிலே தமிழ் தேசிய பிரச்சினைக்கு ஒழுங்கான ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என்ற கருத்தை நாங்கள் வலியுறுத்தி சொன்னோம். அவர்களும் அதனை செவிமடுத்தார்கள். அது மட்டுமல்லாமல்  அந்த பிரச்சினை ஒரு புதிய அரசியல் அமைப்பின் ஊடாக தீர்க்கப்படும்  வரைக்கும் எங்களுடைய மக்களுடைய காணிகளை கபளீகரம் செய்கிற ஒரு திட்டம் நீண்டகாலமாக நடை பெற்று வருகிறது. இப்பொழுதும் தொடர்கிறது. அந்த விபரங்களையும் நாங்கள் அவர்களுக்கு சொல்லியிருக்கின்றோம்.
அவர்கள் வட பகுதிக்கும் விஜயமாக வருவார்கள். ஒரு நீண்டநாள் பிரயாணமாக இதனை  மேற்கொண்டிருக்கிறார்கள்.
அதற்க்கு பிறகு ஐநா செயலாளர் நாயகத்திற்க்கு தங்களுடைய அறிக்கையை கொடுப்பார்கள். நாட்டிலே ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார பிரச்சினை,  அரசியல் பிரச்சினை, அரசியல்  மாற்றங்கள்,  தேர்தல்கள் போன்ற பல வகையான விடயங்கள் குறித்து எங்களுடன் கலந்துரையாடியிருக்கிறார்கள்.
நேற்று கொழும்பில் இடம் பெற்ற அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்தார்கே என கேட்டபோது ?
கடந்த ஞாயிற்டுக்கிழமை  இந்த அறிவிப்பை கொடுக்குமாறு எனக்கு சொல்லியிருந்தார். செவ்வாய்க் கிழமைக்கிடையில் பலருக்கு  நேரம் போதாது என்று சொல்லப்பட்டிருந்தது.
செவ்வாய்க்கிளமை ஐநா குழுவை சந்திப்பதற்க்காக தமிழரசு கட்சி தலைவர் கொழிம்பிற்க்கு வந்திருந்த காரணத்தினால் செவ்வாய்க்கிழமையே இந்த சந்திப்பை நடாத்தலாம் என்று நாங்கள் தீர்மானித்திருந்தோம்
ஆனால் பலர் வராத காரணத்தினாலே அந்த சந்திப்பை அவர்களையும் கலந்தாலோசித்து ஒரு  திகதியையும், இடத்தையும் ஒழுங்கு செய்யுமாறு திரு சம்மந்தன் திரு சேனாதிராஜாவிற்க்கு பணித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews