இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மானம்: பிரித்தானிய பொது சபையில் விவாதம்

இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மானம் ஏற்படுத்திய அதிர்வலைகள்,வெளிவிவகார அமைச்சுக்கு எந்தளவுக்கு தெரியும் இல்லையா என்பது தெரியவில்லை எனினும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் அது எதிரொலிக்கிறது.

இலங்கை தொடர்பான பிரேரணை மீதான பிரித்தானியாவின் பொது சபையில் இந்த வாரம் இடம்பெற்ற விவாதம், இதில் முக்கியமானது என்று உள்ளக தகவல் தெரிவித்துள்ளது.

இதன்படி “இலங்கையில், குறிப்பாக நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது,​​அதிகரித்த இராணுவமயமாக்கல் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிய அறிக்கைகள் குறித்து இந்த விவாதத்தின் போது அக்கறை செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் இராணுவச் செலவு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து இராணுவத்தை நீக்குதல் உட்பட இலங்கையில், உள்நாட்டுப் போரின் போது போர்க் குற்றங்களைச் செய்ததாக நம்பத்தகுந்த முறையில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக தடைகளை நடைமுறைப்படுத்துமாறு, அந்த தீர்மானம், பிரித்தானிய அரசாங்கத்தைக் கோரியுள்ளது.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, இலங்கையை பாதுகாக்கும் ஒரு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரும் இல்லாதது சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு மற்றும் லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் கூட, இவ்வாறான ஒரு விவாதம் பற்றி அறிந்திருக்கவில்லையா? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதனை தவிர, பிரித்தானிய பொதுச்சபையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் கூட, இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, ஒரு அறிக்கையைதானும் வெளியிடவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews