யாழில் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிராக ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக போராட்டம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எற்பாட்டில், முப்படைகளின் தேவைக்கு மக்களது காணிகளை சுவீகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக இன்று (15.11.2022) இந்த கண்டன கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தின் போது எமது நிலம் எமக்கு வேண்டும், தமிழ் அதிகாரிகளே ஆளுநரது பதவிக்கு துணைபோகாதீர்கள், தமிழர்களின் நிலங்களே அபகரிக்காதே, ஐ.எம்.எப் பெறுவதற்கு நாடகமே, இனப்படுகொலை இராணுவமே தமிழர்களது நிலங்களை அபகரிக்காதே, ரணில், ராஜபக்ச அரசே கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை நிறுத்து, வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை எந்திய வண்ணம், கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதேச செயலாளர்களுக்கும் ஆளுநருக்கும் இடையில், தமிழரின் காணிகள் சுவீகரிப்பு தொடர்பிலான கூட்டம் இன்று மதியம் ஆளுநர் செயலகத்தில் இடம்பெறயிருக்கும் நிலையில் அதனை தடுக்கும் வகையில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி க.சுபாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது போராட்ட இடத்துக்கு வருகை தந்த ஆளுநர் தெரிவிக்கையில், இங்கே யாரும் கத்தக்கூடாது. என்னுடைய வேலையை எனக்கு பார்க்கத் தெரியும்.

உங்கள் பிரச்சினையை மட்டும் கூறுங்கள். காணி வழங்குவதற்கு சட்ட ஏற்பாடுகள் உள்ளன. என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு நீங்கள் சொல்லத் தேவையில்லை என்று காரசாரமாக கூறியுள்ளார்.

இதற்குத் மக்கள் பதிலளிக்கையில், எங்களின் காணிகள் எமக்கு வேண்டும். இனியும் காணிகளை அபகரிக்கக்கூடாது என்று கோஷமிட்டனர். அதன் பின்னர் ஆளுநர் அங்கிருந்து சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews