இயல்பு நிலைக்குத் திரும்பும் இலங்கை!

3 மாதங்களுக்கு முன்னர் நாடு இருந்த நிலைமை மக்களுக்கு தெரியும். சமையல் எரிவாயு, எரிபொருள் பெற்றுக்கொள்ள பல நாட்கள் காத்திருக்கவேண்டி இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலைமை மாறியுள்ளதுடன் இயல்புநிலையை நோக்கி நாடு மாறி வருகின்றது என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நீண்டகால வேலைத்திட்டத்தை இலக்குவைத்தே வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. அதனால் பொருளாதார சவாலை வெற்றிகொள்ள வேண்டுமாக இருந்தால், ஜனாதிபதியின் வேலைத்திட்டத்துக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்.

வரவு – செலவுத் திட்டம் மூலம் எந்தவிதமான வரி அதிகரிப்பும் மேற்கொள்ளாமல் நீ்ண்டகால வேலைத்திட்டத்தை இலக்கு வைத்தே சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. இம்முறை வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிப்பது இலங்கை வரலாற்றில் மிகவும் சவால் மிக்கதாகும்.

ஏனெனில் இலங்கையில் வெளிநாட்டு செலாவனி பூச்சியத்தில் இருக்கின்றது. டொலர் இல்லை. கையிருப்புகளை அதிகரிப்பதன் மூலமே முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். அதனால் அவ்வாறானதொரு சவாலுக்கு மத்தியிலேயே ஜனாதிபதி வரவு – செலவுத் திட்டத்தை முன்வைத்திருக்கின்றார்.

அதனால் நாட்டு மக்கள் இந்த நிலைமையை உணர்ந்துகொள்வார்கள். 3மாதங்களுக்கு முன்னர் நாடு இருந்த நிலைமை மக்களுக்கு தெரியும். சமையல் எரிவாயு, எரிபொருள் பெற்றுக்கொள்ள பல நாட்கள் காத்திருக்கவேண்டி இருந்தது.

ஆனால் தற்போது அந்த நிலைமை மாறியுள்ளதுடன் இயல்புநிலையை நோக்கி நாடு மாறி வருகின்றது.

அதன் பிரகாரமே வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. அதனால் பொருளாதார சவாலை வெற்றிகொள்ள வேண்டுமாக இருந்தால், ஜனாதிபதியின் வேலைத்திட்டத்துக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்.

அரசியல் நோக்கத்துக்காக வீதிக்கிறங்காமல் சரியான விடயத்துக்காக வீதிங்குவதில் பிழை இல்லை. அதனால் இன்னும் ஒருவருடம் ஜனாதிபதிக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும். அதன் பின்னர் தேர்தலுக்கு சென்று எமது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அதனால் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டிருக்கும் வரவு – செலவுத் திட்டம் நீண்டகால இலக்கை நோக்கி முன்வைக்கப்பட்டதொன்றாகும் என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin