யாழ்.மாவட்டத்தில் 64 பேர் உட்பட வடக்கில் 114 பேருக்கு கொரோனா தொற்று!

யாழ்.மாவட்டத்தில் மேலும் 64 பேர் உட்பட வடமாகாணத்தில் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சுமார் 687 பேருடைய பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

யாழ்.மாவட்டத்தில் 64 பேருக்கு தொற்று. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் 57 பேர், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர், காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் 02 பேர்

வவுனியா மாவட்டத்தில் 23 பேருக்கு தொற்று. 

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16 பேர், வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையில் 02 பேர்,

பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலையில் 04 பேர், மற்றும் மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 16 பேர், 

கிளிநொச்சி மாவட்டத்தில் 06 பேருக்கு தொற்று. 

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசலையில் ஒருவர், அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையில் 05 பேர்,

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் 02 பேர் ஆகியோருடன் காங்கேசன்துறை கடற்படை முகாமில் ஒருவர்,

இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவர்,பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews