சமூக பாதுகாப்பு வரி காரணமாக சகல பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு – அசேல சம்பத்

சமூக பாதுகாப்பு வரி காரணமாக சகல பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். உணவுப்பொருட்களின் விலைகள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்மொழியப்பட்டு வருகின்றன.

சமூக பாதுகாப்பு வரி காரணமாக உணவுப்பொருட்களின் விலைகள் மட்டுமல்ல சகல பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.

மலசலகூட கட்டணமும்கூட அதிகரித்துள்ளது. 20 ரூபாய் கட்டணம் 30 ரூபாயாக அதிகரித்துள்ளது. நான் சென்ற சகல பிரதேசங்களிலும் மலசலகூட கட்டணமானது 30 ரூபாயாக அதிகரித்துள்ளது.

சமூக பாதுகாப்பு வரி மலசலகூடத்துக்குள்ளும் தாக்கம் செலுத்தியுள்ளது. தேங்காய் விலையிலும் தாக்கம் செலுத்தியுள்ளது. எனவே சந்தையில் சகல பொருட்களிலும் அதேபோன்று சகல சேவைகளிலும் சமூக பாதுகாப்பு வரி தாக்கம் செலுத்திய ஒன்றாகக் காணப்படுகின்றது.

இதற்குள்ளேயே எரிவாயுவின் விலையும் 271 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. இன்றைய சூழ்நிலையில் எரிவாயு வரிசை இல்லாமல் போயுள்ளது.எரிவாயுவை விற்பனை செய்துகொள்ள முடியாமல் விற்பனை நிலையங்கள் காணப்படுகின்றன.

இவ்வாறான நிலையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டமைக்காக நான் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Recommended For You

About the Author: admin