எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மற்றும் முகாமையாளரை அமைச்சர் ஒருவருடன் தொடர்பு கொண்டதாகக் கூறிக்கொள்ளும் குழுவினர் தாக்கிய சம்பவமொன்று தொடர்பில் மஹரகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சிறிய ரக வானொன்றில் வந்த ஒருவர், தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு QR குறியீடு இல்லாமல் எரிபொருளை நிரப்ப முயன்ற போது அந்த நபருக்கும், எரிபொருள் நிலைய பணியாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது குறித்த நபர் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரை தாக்க முற்பட்டதால், எரிபொருள் நிலைய ஊழியர் பம்பை எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளார்.இதன்போது வான் சாரதியின் முகத்தில் எரிபொருள் துளிகள் தெறித்துள்ளன.
இதனை தொடர்ந்து எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து வெளியேறிய நபர், அமைச்சர் ஒருவருடன் தொடர்பிலிருப்பதாகக் கூறி குழுவொன்றுடன் திரும்பி வந்து எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மற்றும் முகாமையாளரைத் தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தின் காணொளி காட்சிகள் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.