பொதுசுகாதார பரிசோதகர்கள் நாளை சுகயீன விடுப்பு போராட்டம்…!

புற்றுநோய் காரணிகள் அடங்கிய “திரிபோஷா” மக்களுக்கு வழங்குவது தொடர்பாக கருத்து வெளியிட்ட இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சஙகத் தலைவர் உபுல் ரோகணவை இலக்காகக் கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நாளை   28.09.2022 புதன்கிழமை அன்று சுகயீன விடுப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் அறிவித்துள்ளது.

இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் மத்திய குழு,  மற்றும் செயற்குழு ஆகியவற்றில் இத்  தீர்மானம் நிடைவேற்றப் பட்டுள்ளதாக அதன் யாழ் மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கமும்  அறிவித்துள்ளது.

குழந்தைகளுக்கு வழங்கும் திரிபோசாவில் புற்று நோயை ஏற்படுத்தக் கூடிய இராசயன கூறுகள் இருப்பதாகவும் அதனை குழந்தைகளுக்கு வழங்குவதை நிறுத்துவது தொடர்பில் பரிசீலனை செய்யுமாறு அகில இலங்கை பொதுசுகாதார பெரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுள் ரோகண கருத்துதெரிவித்திருந்த நிலையில் அவரை நேரடியாக அழைத்து  மிக கடுமையான மன உளைச்சலுக்கு எதிர்ப்பு தெரிவித்தே பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் இச் சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளமை குறிப்பிட தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews