சுற்றுலா பயணிகள் வருகை தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாட்டில் மீண்டும் இடம்பெற்று வரும் போராட்டங்கள் மற்றும் வன்முறைகள் காரணமாக நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறையலாம் என ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இந்த வருட இறுதி வரை சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து பணம் வழங்கப்பட மாட்டாது.

“சுற்றுலாவில் முக்கிய விஷயம் நாட்டில் அமைதியான சூழலை உருவாக்குவது. மீண்டும் போராட்டங்களை நடத்தி உலகுக்குக் காட்டினால் நாட்டில் அமைதி இல்லை. நாட்டில் பரபரப்பு அலை வீசுகிறது என்று உலகிற்கு தகவலை அனுப்பினால் சுற்றுலா பயணிகள் திரும்பி வரமாட்டார்கள்.

இந்த வருடத்தில் இந்த மூன்று நான்கு மாதங்களில் சுற்றுலாப் பயணிகளையும் அன்னியச் செலாவணியையும் நாட்டிற்குக் கொண்டு வராவிட்டால் பெரும் அச்சுறுத்தலைச் சந்திக்க நேரிடும் என்பதை இந்தப் போராட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களும் பொதுமக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நமக்கு தேவையான விஷயங்களை முன்னோக்கி கொண்டு வாருங்கள். ஏனெனில் இந்த ஆண்டு இறுதி வரை சர்வதேச நாணய நிதியம் ஐந்து காசுகளை கூட வழங்காது.”என்றார்.

Recommended For You

About the Author: admin