திலீபன் வழியில் வருகிறோம்’ ஊர்தி பவனி யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது!

தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ‘திலீபன் வழியில் வருகிறோம்’ என்று முன்னெடுக்கப்படுகின்ற ஊர்தி பவனியானது யாழ் மாவட்டத்துக்குள் வந்தடைந்ததுடன் இன்றைய தினம் வடமராட்சிப் பகுதிகளில் பயணித்தது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தின் பொத்துவிலில் ஆரம்பித்த ஊர்தி பவனி, தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கியவாறு பருத்தித்துறை நகருக்குள் இன்று காலை பயணித்தது.

இதன்போது தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு பலரும் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

பருத்தித்துறையில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் தூபியடியில் அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது. இந்த ஊர்திப் பவனியானது யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணிக்கவுள்ளதுடன் எதிர்வரும் 26 ஆம் திகதி நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தை வந்தடையும்.

Recommended For You

About the Author: bavany