மீன் சாப்பிடுவதை தவிர்க்கும் மக்கள்.

பொதுமக்கள்  தற்போது பெரிதளவில் மீன்களை கொள்வனவு செய்வதிலலை என தெரிவிக்கப்படுகின்றது.

சந்தையில் மீன்களின் விலை குறைந்துள்ள போதிலும், நுகர்வோர் கொள்வனவு செய்யாத நிலை காணப்படுவதாக வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பேலியகொடை மீன் வர்த்தக நிலையத்தில் லின்னா, பலாயா, சாலயா, அரிசி ஈக்கள் போன்ற சில வகை மீன்களின் விலை குறைவடைந்துள்ளது.

எனினும், மீன்களை கொள்வனவு செய்வதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர். தற்போது ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1,600 ரூபாவாக உள்ளது.

Recommended For You

About the Author: admin