பிள்ளைகள் செத்துப்போவார் என பெற்றோரை பயமுறுத்தி காலாவதியான பைஸர் தடுப்பூசியை ஏற்றுங்கள்! மிரட்டும் சிங்கள மருத்துவர்.

மாணவர்கள் உயிரிழப்பார்கள் என கூறி பெற்றோரை அச்சுறுத்துவதன் மூலம பைஸர் தடுப்பூசிகளை மாணவர்களுக்கு ஏற்றுங்கள் என மருத்துவர்களுடனான கலந்துரையாடலில் சிங்கள அதிகாரி ஒருவர் வடக்கு மருத்துவர்களை மிரட்டியுள்ளார். 

இலங்­கை­யி­லேயே வடக்கு மாகா­ணத்­தில்­தான் 4 ஆவது டோஸ் ஏற்­றி­ய­வர்­கள் குறை­வாக உள்­ளார்­கள் என்­றும் அந்­தச் சிங்­கள அதி­காரி தெரி­வித்­துள்­ளார். நாடு முழு­வ­தும் 4ஆவது டோஸை காலா­வ­தி­யான பைஸரை 0.8 சத­வீ­தத்­தி­னரே இது­வரை ஏற்­றி­யுள்­ள­னர்.

இந்­தத் தக­வலை மறைத்து மேற்­கண்­ட­வாறு அந்த அதி­காரி கூறி­யுள்­ளார்.இதே­வேளை தடுப்­பூசி தொடர்­பான விட­யங்­க­ளில் இது­வரை கால­மும் எந்­த­வொரு கடி­தங்­களோ, அறிவு­றுத்­தல்­களோ, சுற்­ற­றிக்­கை­களோ அனுப்­பாத. வடமாகாண பிர­தம செய­லர் சமன் பந்­து­ல­சேன, காலா­வ­தி­யான தடுப்­பூசி ஏற்றப்படாமல் இருப்­பது தொடர்­பில் வடக்கு மாகாண சுகா­தா­ரத் திணைக்­க­ளத்­துக்கு கடி­தம் அனுப்­பி­யுள்­ளார்.

காலா­வ­தி­யான தடுப்­பூ­சியை ஏற்ற முடி­யும் என்ற சுகா­தார அமைச்­சின் சுற்றறிக்கையை­யும் இணைத்து அவர் அந்­தக் கடி­தத்தை அனுப்­பி­யுள்­ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews