கிளிநொச்சி அக்கராயன் மகா வித்தியாலயம் சம்பியனானது.

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான 19 வயதுக்குட்பட்ட  கிரிக்கெட் போட்டியில்  நெல்லியடி மத்திய கல்லூரியை எதிர்த்து விளையாடிய  கிளிநொச்சி அக்கராயன் மகா வித்தியாலயம் சம்பியனாகி தேசிய மட்டத்தில்  விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.

5 ஒவர்கள்  கொண்ட  போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய     கிளிநொச்சி அக்கராயன் மகா வித்தியாலயம் 61  ஓட்டங்கள் எடுத்தது. 62  ஓட்ட எண்ணிக்கையிடம் களம் இறங்கிய நெல்லியடி மத்திய கல்லூரி சகல விக்கெட்களையும் இழந்து 39 ஓட்டங்கள் எடுத்து 22  ஓட்டங்களால் தோல்வியடைந்தது. பழனியாண்டி நிதுஷன் 15 பந்துகளில் 41  ஓட்டங்கள் எடுத்ததுடன் ஒரு ஓவர் பந்து வீசி ஒரு விக்கெட்டை வீழ்த்தி வெற்றிக்கு பங்களிப்பு வழங்கினார்.

 

சுமார் 7 வருடங்களுக்கு முன்னர் இந்த பாடசாலை 1ஆB பாடசாயாக தரம் உயர்த்தப்பட்டது. மிகவும் பினதங்கிய பிரதேசம் அக்காரயன் பிரதேசம். விவசாயமே மூலமான தொழிலாக இருந்தாலும், கூலி வேலை செய்வோரே அதிகமாக உள்ளனர்.2019 ஆம் ஆண்டு ஒரு மாணவனின் மருத்துவபீட மாணவனின் (மாவட்டமட்டம் 02) சாதனையோடு பாடசாலை வீறுநடை போடத்தொடங்கியது.

கடந்தமுறை வெளியாகிய உயர்தர பெறுபேறுகளில் ஒரு மாணவி மருத்துவ பீடத்திற்கும் (மாவட்டமட்டம்  01), ஒரு மாணவன் பொறியியல் பீடத்துற்கும் தெரிவாகி உள்ளனர். கல்வியிலும், விளையாட்டிலும் முன்னேறி வரும் இப்பாடசாலையில் 12 கிராமங்களை சேர்ந்த சுமார் 850 மாணவர்கள் கல்வி கற்கிறார்கள்.

Recommended For You

About the Author: Editor Elukainews