யாழில் கொரோனா தொற்றினால் மேலும் 4 பேர் மரணம்…!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

இந்நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அச்வேலியை சேர்ந்த 85 வயதான ஆண் ஒருவரும்,

பருத்தித்துறையை சேர்ந்த 65 வயதான ஆண் ஒருவரும், பருத்தித்துறை – தும்பளையை சேர்ந்த 39 வயதான ஆண் ஒருவரும்,

பருத்தித்துறை – இமையாணன் பகுதியில் மயங்கி விழுந்த நிலையில் மந்தியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த 45 வயதான ஆண் ஒருவருமாக மாவட்டத்தில் 4 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்திருக்கின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews