கொழும்பு கோட்டை மற்றும் பதுளைக்கு இடையில் மேலுமொரு தொடருந்து சேவை

கொழும்பு கோட்டை மற்றும் பதுளைக்கு இடையில் மேலுமொரு தொடருந்து சேவையை முன்னெடுக்க தொடருந்து திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 16, 17, 18 ஆம் திகதிகளில் மாத்திரம் இந்த சேவையினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தொடருந்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

வார இறுதி நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, மாலை 7.20 இற்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படவுள்ள தொடருந்து, அதிகாலை 5.03 அளவில் பதுளை தொடருந்து நிலையத்தினை சென்றடையும்.

பதுளையில் மாலை 7.30 இற்கு புறப்படும் தொடருந்து அதிகாலை 5.28 அளவில் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தினை வந்தடையும்.

மேலும், இரவு நேர தபால் சேவை ரயில் நாளாந்தம் இரவு 8.30 அளவில் பதுளையிலிருந்து புறப்படவுள்ளதோடு, மறுநாள் காலை 7.32 இற்கு கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தினை வந்தடையும்.

மேலும் மாலை 6.05 அளவில் கொழும்பிலிருந்து புறப்படவுள்ள தொடருந்து, மறுதினம் அதிகாலை 5.24 அளவில் பதுளை தொடருந்து நிலையத்தினை சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin