பிரபஞ்ச சக்தியை காட்டி சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சாமியார்

தனது செல்போனில் இருக்கும் ஆபாச காட்சியை பார்க்க மறுத்தால், பிரபஞ்ச சக்தி மந்திரத்தின் மூலம் கருவுற செய்ய போவதாக அச்சுறுத்தி, 12 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சாமியாரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிரபஞ்ச சக்தியில் நோய்களை குணமாக்கும் சிகிச்சைகளை வழங்கி வந்த சாமியார் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குளியாப்பிட்டிய பல்லேவல பிரதேசத்தில் சிகிச்சையளிக்கும் ஆலயம் ஒன்றை நடத்தி வந்த, விலபொல என்ற பிரசேதத்தை சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆபாச காட்சிகளை காட்டி இரண்டு வருடங்களாக சந்தேகநபர், சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளார்.

அத்துடன் சிறுமி தண்ணீர் எடுக்க சென்றிருந்த போது, சமையல் அறைக்கு பின்னால், வைத்து பலவந்தமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரின் வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் வசித்து வரும் சிறுமி, இந்த சம்பவத்திற்கு பின்னர் பாடசாலை செல்ல மறுத்துள்ளார்.

துரித கதியில் சிறுமியிடம் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதுடன் வீட்டில் வசிக்கவும் மறுத்துள்ளார். இதனையடுத்து வெயங்கொடை பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் சேர்த்துள்ளனர்.

இதனையடுத்தே தான் எதிர்நோக்கிய சம்பவத்தை சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளதுடன் தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin