கிளிநொச்சியில் நான்காவது நாளாக முன்னெடுக்கப்படும் ஊர்திவழி போராட்டம்!

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழி போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் நான்காவது நாளாக நேற்று (13.09.2022) ஊர்திவழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி – பூநகரி, வாடியடி சந்தியில் காலை ஆரம்பமான ஊர்திவழி போராட்டம் தொடர்ந்து, பரந்தன், முறிகண்டி, முழங்காவில் ஆகிய பகுதிகளில் உள்ள  மக்களிடம் கையொப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய வாலிபர் முன்னணியும், சர்வஜன நீதி அமைப்பும் முன்னெடுத்த கையெழுத்து திரட்டும் பிரச்சார நடவடிக்கையானது முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

Recommended For You

About the Author: admin