எரிபொருள் கப்பல்களுக்கான தாமதக் கட்டணம் 432 மில்லியன் டொலர்

கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் எரிபொருள் கப்பல்களுக்கான தாமதக் கட்டணம் 432 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு துறைமுகத்தில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட மூன்று எரிபொருள் கப்பல்கள் சில நாட்களாக தரித்து நிற்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கப்பல்களுக்கு செலுத்த கையிருப்பில் போதியளவு டொலர்கள் இல்லாத காரணத்தினால் அந்தக் கப்பல்களின் எரிபொருள் இறக்கப்படவில்லை.

பெருந்தொகை எரிபொருட்களுடன் இந்த மூன்று கப்பல்களும் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டு காத்திருப்பதாக பெட்ரோலிய வளக் கூட்டுத்தாபன உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

டொலர்கள் கையிருப்பில் இல்லாத காரணத்தினால் எரிபொருள் கப்பல்களுக்கு பெருந்தொகை தாமதக் கட்டணங்களை செலுத்த நேரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin