இரகசியமாக வெளிநாடு பறக்கும் வைத்தியர்கள் -ஏற்படவுள்ள கடும் பாதிப்பு!

இந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் சுமார் ஐநூறு இலங்கை வைத்தியர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலைமை பாரதூரமான விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த இரண்டு மாதங்களில் வெளிநாடு சென்ற பல வைத்தியர்கள் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்காமல்  சென்றுள்ளதாகவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாக இராஜினாமா அறிவித்தல் விடுத்துள்ள வைத்திய நிபுணர்களின் எண்ணிக்கை ஐம்பதுக்கும் அதிகமாக உள்ளதாக வைத்தியர் சமில் விஜேசிங்க குறிப்பிட்டார்.

வெளிநாடுகளுக்கான வைத்தியர்களின் புலம்பெயர்வு நாட்டின் சுகாதாரத் துறையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்த அவர், இந்நிலைமை நாட்டின் அப்பாவி மற்றும் ஏழை மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் எனவும் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: admin