மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

கடந்த நாட்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாகமரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒரு கிலோகிராம் போஞ்சி 600 ரூபாவுக்கும், கரட் ஒரு கிலோ 400 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் கறி மிளகாய் 800 ரூபாவுக்கும் கத்தரிக்காய் ஒரு கிலோகிராம் 400 ரூபா வரையும் அதிகரித்துள்ளது.

அதேநேரம் வெள்ளரிக்காய், பீர்க்கங்காய் மற்றும் மரவள்ளிக்கிழங்கு என்பவற்றின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த போகத்துடன் ஒப்பிடும் போது பெரிய வெங்காய பயிர்ச்செய்கைக்கு பாரிய செலவீனத்தை ஏற்க வேண்டியுள்ளதாக பெரிய வெங்காய பயிர்ச்செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: admin