யாழ்.மண்டைதீவு சோதனை சாவடியில் இருவர் கைது!

யாழ்.மண்டைதீவு சோதனை சாவடியில் வைத்து சுமார் 50 கிலோ மாட்டிறைச்சியுடன் இருவர் பொலிஸார் மற்றும் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டிருக்கின்றனர்.

தீவகத்திலிருந்து பயண பையில் மாட்டிறைச்சியை பதுக்கி எடுத்துவருவது தொடர்பாக பொதுமக்கள் வழங்கிய தகவல் அடிப்படையில் 50 கிலோ இறைச்சியை கடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இது குறித்து தீவக சிவில் சமூகத்தினர், மாடு ஒன்றை களவாடி அதனை வெட்டி அதன் இறைச்சியை விற்பனைக்கு கொண்டுவந்தேபோதே இவர்கள் தொடர்பான தகவல் கிடைக்கப்பெற்றதாகவும்,

அதனடிப்படையில் பேருந்தில் பயணித்த குறித்த நபர்களை மண்டைதீவு சோதனை சாவடியில் வழிமறித்து கைது செய்ததாக கூறினர். கைதானவர்களில் ஒருவர் புங்குடுதீவை சேர்ந்தவர் எனவும், 

மற்றையவர் சரவணையை சேர்ந்தவர் எனவும் கூறப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews