யாழ்.நகர் மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் சைக்கள் திருடிவந்த 19வயது, 20 வயதான இருவர் கைது! திருடப்பட்ட சைக்கிள்களும் மீட்பு.. |

யாழ்.நகர் பகுதி மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டுவந்த இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்.இந்து கலலூரி, முனியஸ்வரன் ஆலயம் , யாழ்.நகரப்பகுதி, கொக்குவில் போன்ற பிரதேசங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த குறித்த துவிச்சக்கரவண்டிகள்

கடந்த சில நாட்களாக திருடப்பட்டுவந்திருந்தன.குறித்த நபர் தொடர்பில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்புபிரிவினரிற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில்

யாழ்.சாவக்கட்டு பகுதியை சேர்ந்த 19, 20 வயதுடைய இருவர் சாவக்கட்டு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் திருடப்பட்ட 5 துவிச்சக்கரவண்டிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டன.

எனினும் இது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறாததால் மேற்சொல்லப்பட்ட பகுதிகளில் துவிச்சக்கரவண்டிகளை தவறவிட்டவர்கள்

மாவட்ட குற்றத்தடுப்புபிரிவு பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews