ரகசிய பரிபாஷை மூலம் வீரர்களுக்கு ஆலோசனை வழக்கிய  இலங்கைப் பயிற்சியாளர்.

ஆசியக் கிண்ணப் போட்டியில் பங்களாதேஷுக்கு எதிராக இலங்கிப் பயிற்சியாளர் களத்துக்கு வெளியில் இருந்து ஆலோசனை வழங்கியதால் தனது கண்ணடங்களையும் அதிருப்தியையும் பங்களாதேஷ் தெரிவித்துள்ளது. முந்தைய ஆட்டங்களிலெல்லாம் களத்தில் இருக்கும் வீரர்களுக்கு தண்ணீர் கொடுப்பது போலவோ, அல்லது வேறு கிளவ், போன்றவற்றை வீரர்களுக்கு கொடுத்தனுப்புமாறு அணி நிர்வாகம் ஆலோசனைகளை வழங்கி வரும்.

இப்போது   பழைய பாணியெல்லாம் மலையேறிவிட்டது. இலங்கை அணியின் பயிற்சியாளரான இங்கிலாந்தின் கிறிஸ் சில்வர் உட்,  ஒரு காகிதத்தில் ஆங்கில எழுத்தையும் இன்னொரு காகிதத்தில் எண்ணையும் எழுதி வைப்பார், இதைப் பார்க்கும் இலங்கை க‌ப்டனுக்கு இந்த பரிபாஷை புரியும் இதன் மூலம் அவர் களவியூகத்தையோ, பந்து வீச்சு மாற்றத்தையோ கொண்டு வருவார்.

கிறிஸ் சில்வர்வுட் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்படுகிறார். இதனால் தன்னுடைய யுத்தியை இலங்கை அணிக்காகவும் அவர் நடைமுறைப்படுத்தினார். பங்களாதேஷ் துடுப்பெடுத்தாடியபோது  போது 2 D என்று தனித் தனி பேப்பரில் காண்பிக்கப்பட்டது. இதன் அர்த்தம் என்ன என்று ரசிகர்களும் யோசித்தனர்.

இரண்டு வீரர்களை டீப்பில் நிறுத்து என்று அர்த்தமா, அல்லது துடுப்பாட்ட வீரரை  ட்ரைவ் ஆட வைத்து அந்த இடத்தில் வீரரை  நிறுத்து என்று அர்த்தமா என்று பலரும் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கின்றனர். இனி இந்த யுத்தி பரவலாகும் என்று எதிர்பார்க்கலாம்.

Recommended For You

About the Author: Editor Elukainews