பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லிப்பளை பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் உழவு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அல்லிப்பளை பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுவதாக பளை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே நேற்று (05) அதிகாலை 1.00மணியளவில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்படுவார் எனவும் மண் ஏற்றிய நிலையில் உள்ள உழவு இயந்திரங்கள் வருகின்ற (07)திகதி கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும பளை பொலிசார் தெரிவிக்கின்றனர்.