கிளிநொச்சியில் மிகத் தீவிரம் பெற்றுள்ள கொரோனா அபாயம்…!

கிளிநொச்சியில் உயிரிழந்த இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் உயிரிழந்த 75 வயதுடைய அழகம்மா என்ற பெண் மற்றும் 47 வயதுடைய விஜயகுமார் ஆகிய இருவரின் மாதிரிகள் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருந்தன.
அவற்றின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.
அவற்றின் அடிப்படையில்,
நேற்றைய நாள் வீதியில் வீழ்ந்து உயிரிழந்த கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை ஊழியரான விஜயகுமார் கொரோனாத் தொற்றின் பாதிப்பினாலேயே உயிரிழந்துள்ளை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை கிளிநொச்சியில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
196 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட எழுமாற்றான பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் அண்மைய நாட்களாக பெருமளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் மிகத் தீவிரம் பெற்றுள்ள கொரோனா அபாயம் குறித்து மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews