வடமராட்சி கிழக்கில் அம்பன் பிங்பொங் விளையாட்டு கழகம்  வெற்றி….!

வடமராட்சிக் கிழக்கு குடத்தனை உதயசூரியன் விளையாட்டுக் கழகம் நடாத்திய வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்க்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான மென்பந்து துடுப்பாட்டப் போட்டியின் இறுதி போட்டி இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமானது.

 இந் நிகழ்வில் மங்கல வழக்கினை  பிரதம,  சிறப்பு, கௌரவ விருந்தினர்கள் ஏற்றி வைத்த தொடர்ந்து  இறுதிப் போட்டி ஆரம்பமானது.
இறுதிப் போட்டிக்கு  நாகர்கோவில் வெண்மதி விளையாட்டு கழகம் மற்றும் அதன் பிங்பொங் விளையாட்டுக்கழகம் ஆகியன தெரிவு செய்யப்பட்டிருந்தது.
 இதில் அம்பன் பிங்பொங் விளையாட்டு கழகம் வெற்றியீட்டியது. அதனைத் தொடர்ந்து அம்பன் பிங்பொங் விளையாட்டு கழகத்திற்க்கும் போட்டியை நடத்திய விளையாட்டுக் கழகமான குடத்தனை கிழக்கு உதயசூரியன் விளையாட்டுக் கழகத்திற்கும் இடையில் சவால் போட்டி இடம் பெற்றது. இதிலும் அம்பன்  பிம்பொங் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது.
தொடர்ந்து கருத்துரையை நிகழ்வின் பிரதம விருந்தினரான குடத்தனை கிழக்கு கிராம உத்தியோகத்தர் அருணாசலம் உமாசங்கர் நிகழ்த்தினார்.  அதனைத் தொடர்ந்து   இறுதிப் போட்டியில் வெற்றியீட்டிய மற்றும் சவால் கிண்ண போட்டியில் வெற்றியீட்டிய அம்பன் பிங்பொங் விளையாட்டு கழக வீரர்களுக்கு பதக்கங்கள் பிரதம, கௌரவ, சிறப்பு விருந்தினர்களால் அணிவிக்கப்பட்டது.
 மென்பந்து போட்டியிலும், சவால் கிண்ண போட்டியிலும் வெற்றியீட்டிய அம்பன் பிங்பொங் விளையாட்டு கழகத்திற்க்கு வெற்றிக் கேடயம் வழங்கப்பட்டது.
 வெற்றிக்கு கேடயத்தினை நிகழ்விநண் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட குடத்தனை கிழக்கு கிராம உத்தியோகத்தர் அ. உமாசங்கர் மற்றும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்த ஆழியவளை சமுர்த்தி உத்தியோகத்தர் கி.ராஜ்கரண், குடத்தனை கிழக்கு கிராம அபிவிருத்தி  சங்கத் தலைவர் உட்பட்ட சிறப்பு விருந்தினர்களும், கௌரவ விருந்தினர்களும் இணைந்து வழங்கி வைத்தனர்,

கடந்த 14ஆம் திகதி ஆரம்பமான குறித்த மென்பந்து துடுப்பாட்டப் போட்டியின் ஆட்டநாயகநாக சாஜிகனும்,  தொடர் நாயகனாக சிவநேந்திரன்  சயந்தன்,  சவால் கிண்ண ஆட்டநாயகனாக கனகநாதன் சயிந்தனும்,  தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.
அவர்களுக்கான பரிசில்களும் விருந்தினர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதில் வடமராட்சிக் கிழக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள்,  நலன்விரும்பிகள்,  பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

Recommended For You

About the Author: Editor Elukainews