ரணில் அரசாங்கத்தை அமைப்பது மக்களின் ஆணைக்கு முரணானது..! அனுரகுமார அதிரடி

அரசாங்கம், தனியார் துறையினர், விவசாயிகள், வெளிநாடுகளில் உள்ள மக்கள் என அனைவரும் ஒன்றாக இணைந்து கைகோர்த்தால், இரண்டு மூன்று ஆண்டுகளில் நெருக்கடியில் இருந்து மீள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து மக்களையும் இவ்வாறு ஒன்றிணைக்க வேண்டுமாயின் மக்கள் ஆணையில் புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர், ” நாட்டின் தற்போதைய அதிபரை மக்கள் தெரிவு செய்யவில்லை.

அத்துடன் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கிடைத்த மக்கள் ஆணையின் மூலம் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை அமைப்பது மக்களின் ஆணைக்கு முரணானது. மக்களால் தெரிவு செய்யப்பட்டவரே நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்த முடியும்.

நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு மக்கள் ஆணை அவசியம். தற்போது மக்கள் ஆணையில்லாத மிதக்கும் மனிதர்கள் சிலர் வந்து நாட்டை ஆட்சி செய்கின்றனர்”, எனக் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: admin