வல்லிபு ஆழ்வார் ஆலய உற்சவம் பிற்போடப்பட்டுள்ளது…!

நாட்டில் தற்போது கொரோணா அபாயம் அதி உச்சமாக காணப்படுவதால் வரலாற்று சிறப்பு மிக்க துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த உற்சவம் 2022 ஆண்டு மாசி மாதம் வரும் பூரணை மகம் நாளிற்க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நதாத்துவது தொடர்பாக தர்ம கர்த்தா சபை, ஆலய நிர்வாகம், திருவிழா உபய காரர்களுடன் ஆலய வளாகத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலியேயே இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆலய தற்காலிக தர்மகர்த்தா சு.குலசேகரம் தலமையில் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியதை தொடர்ந்து ஆலய பிரதம குரு சுதர்சனக் குருக்கள் ஆசியுரை இடம் பெற்றுத் தொடரந்தே இத் தீர்மானம் நிறைவேற்ற பட்டுள்ளது.இதில் பதினைந்து திருவிழா உபயதாரர்கள் உட்பட இருபது பேர்வரை கலந்து கொண்டனர்

Recommended For You

About the Author: Editor Elukainews