கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை –

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 48 வீதம் அதிகரித்துள்ளதாகவும் இந்த மாதம் மிகவும் ஆபத்தானது எனவும் ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 30 வீதமாக அதிகரித்துள்ளது.

காணப்படும் நிலைமையை மக்கள் நன்றாக உணர்ந்து அத்தியாவசிய காரணங்களுக்காக அன்றி வீட்டில் இருந்து வெளியில் செல்ல வேண்டாம் எனவும் ராஜாங்க அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனாவை ஒழிப்பதற்கான ஒரே வழி நோய் தொற்றுவதை தவிர்த்துக்கொள்வது எனவும் அரசாங்கமோ, வேறு எவரோ சட்டத்தை அமுல்படுத்தும் வரை காத்திருக்காது மக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தமது குடும்பத்தை பாதுகாக்கும் பொறுப்பு தமக்கே உள்ளது. தேவையற்ற பயணங்களை நிறுத்துமாறும் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews