இலங்கையின் 700 எரிபொருள் நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க நடவடிக்கை

சில்லறை விற்பனை செயற்பாடுகளுக்காக 500 முதல் 700 எரிபொருள் நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க இலங்கை அரசாங்கம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் 1200 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து இந்த 700 நிரப்பு நிலையங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளன.

அடுத்த நான்கு மாதங்களுக்கு எரிபொருட்களை கொள்வனவு செய்ய 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என்ற அடிப்படையில், அதற்கான வாய்ப்புகள் அற்ற நிலையிலேயே எரிபொருள் நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த வெளிநாட்டு நிறுவனங்களில் சீனாவின் சினோபெக் குழுமம் மற்றும் பிரிட்டிஷ் ஷெல் நிறுவனம் உட்பட பல்வேறு நிறுவனங்களின் 27 முன்மொழிவுகள், இலங்கை மின்சார சபைக்கு கிடைத்துள்ளன.

இதன்படி குறித்த எரிபொருள் நிலையங்களை வழங்குவதற்காக நான்கு முன்மொழிவுகளை சுருக்கப்பட்டியலுக்குள் கொண்டு வர எரிசக்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தின்படி, எரிபொருள் நிலையங்களை கொள்வனவு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள், எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகம் செய்ய வேண்டும்.

மேலும், போக்குவரத்து வசதிகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin