நல்லுார் ஆலய சுற்றாடலில் கூடிய பொதுமக்கள்! பொலிஸார் தடுத்ததால் முறுகல், வீதியில் நின்று வழிபாடு நடாத்த அனுமதி.. |

நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான நிலையில் ஆலயத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டோர் மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்

நல்லூர் ஆலய முன்பக்க பருத்தித்துறை வீதியில் கோயில் நிர்வாகத்தினரின் உத்தரவில் பொலிசாரின் பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொடியேற்ற நிகழ்வினை பார்க்காதவாறு தடை செய்யப்பட்டுள்ளது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பேருந்து விலக்கப்பட்டு ஆலயத்தை துாரத்திலிருந்து பார்க்க மக்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் மக்கள் வீதியில் தேங்காய் உடைத்து, வீதியில் அமர்ந்திருந்து ஆலய வழிபாட்டை நடத்தியிருக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews