கடற்தொழிலாளர் எதிர்கொள்ளும் மண்ணெண்ணை பிரச்சினைக்கு இந்தவார இறுதியிலிருந்த தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

கடற்தொழிலாளர் எதிர்கொள்ளும் மண்ணெண்ணை பிரச்சினைக்கு இந்தவார இறுதியிலிருந்த தீர்வு கிடைக்கும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஏற்கனவே பல்வேறு பாதிப்புக்களையும், பொருளாதாரத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், கடல்சார் உணவினை பெற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு விலை அதிகரித்து காணப்படுவது தொடர்பில் அமைச்சரிடம் வினவப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர்,

இந்த பிரச்சினை இருப்பது உண்மைதான். இந்த நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதனால் எமது மக்கள் அதிகளவான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றார்கள். அதற்கு தீர்வு காணும் வகையில் எரிபொருளை தாராளமாக கிடைக்கக்கூடிய ஏற்பாடுகளும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குறிப்பாக கடற்தொழிலாளர்களை பொறுத்தவரையில், சிறு கடற்தொழிலாளர்களிற்கு மண்ணெண்ணை ஒரு தட்டுப்பாடாக இருக்கின்றது. சற்று முன்பும் கொழும்புடன் தொட்புகொண்டு தனியாரால் மண்ணெண்ணை இறக்கப்படுவது தொடர்பில் தற்போது உள்ள நிலை தொடர்பில் கலந்துரையாடியுள்ளேன்.
அதேவேளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தபனமும் மசகு எண்ணையை வடித்து மண்ணெண்ணையாக விநியோகிப்பதற்கான நடவடிக்கையும் நடைபெற்றக்கொண்டிருக்கின்றது. இந்த வார இறுதியில் கைகூடும் என்று நம்புகின்றேன்.
மதிதிய அரசின் அமைச்சராக இருந்தாலும், நன்நீர் மீன்பிடியை அதகரிப்பதற்கான முயற்சி மத்திய அரசினால் முன்னெடுக்கப்படுகின்றதா என அவரிடம் வினவியபோது,
நாடு தளுவிய ரீதியில் அந்த திட்டத்தை நாய்கள் கொண்டு வருகின்றோம். கிளிநொச்சி மாவட்டத்தில் முறிப்பு எனும் இடத்தில் 30 சிறு குளங்கள் உள்ளது. அதில் 5 குளங்களை புதுப்பித்திருக்கின்றோம்.
குறித்த இடத்தினை   பார்க்க சென்று, அதனை எவ்வளவு விரைவில் இயக்க முடியும் என முயற்சிக்கின்றோம். அதேவேளை, ஏனைய குளங்கள், வாவிகள் என எல்லாவற்றிலும் நாங்கள் மீன்குஞசுகளையும், இரால் குஞசுகளையும் விடுவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews