இந்திய இழுவை படகுகளுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதா..!: வி.அருள்நாதன்

கடற்றொழில் அமைச்சர் கடற்படையினருக்கு இந்திய இழுவை படகுகளை பிடிக்க வேண்டாம் என்று கூறியுள்ளதாக கடற்படை அதிகாரி தெரிவித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளார் சங்கங்களின் சம்மேளன தலைவர் என வி.அருள்நாதன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் தொடர்பிலும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கை மற்றும் இந்திய இழுவைப்படகுகளின் வருகை தொடர்பிலும் கருத்து தெரிவித்த அவர்,

“முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு மேல் எரிபொருள் இல்லாத நிலையினால் 1500 வரையான படகுகள் தொழில் செய்யமுடியாத நிலையில் தள்ளப்பட்டுள்ளது.

இன்று சுமார் 150 வரையான இந்திய இழுவை படகுகள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கடல் வளத்தினை சூறையாடுகின்றன.

இந்த நிலையில் இந்திய இழுவைப்படகுகள் எங்கள் வளங்களை அழிக்கின்றார்கள் கடற்படை ஒன்று மட்டும் செய்கின்றார்கள் எங்கள் நாட்டில் வாழமுடியாத நிலையில் மக்கள் கடல்வழியாக தப்பிசெல்லும் போது அவர்களை சரியாக பிடிக்கின்றார்கள். ஆனால் இந்திய படகுகளை கண்டுகொள்கின்றார்கள் இல்லை.

எமது கடல் வளத்தினை தொடர்ச்சியாக இந்திய இழுவை படகுகள் அழித்து வருகின்றன. தமிழக அரசின் நிவாரண பொருட்கள் எங்களுக்கு வேண்டாம் எங்கள் கடல்வளத்தினை அழிக்காமல் இருந்தால் போதும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews