லிட்ரோ சமையல் எரிவாயு விலை 246 ரூபாவால் குறைந்து!

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலை  நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளன என லிட்ரோ காஸ்  நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் மூலம், வீட்டு சிலிண்டர்களின் விலை பின்வருமாறு குறைக்கப்பட்டுள்ளது.

  1. 12.5 கிலோ கிராம்  246 ரூ.பாவாலும்
  2. 5 கிலோ கிராம் 99 ரூபாவாலும்,
  3. 2.2 கிலோ  45 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

12.5 கிலோகிராம் எடையுள்ள உள்நாட்டு சிலிண்டரின் புதிய விலை ரூ. 4664. 5 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் புதிய விலை ரூ. 1872 மற்றும் 2.2 கிலோவின் புதிய விலை ரூ. 869 ஆகவும் உள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews