நாடு முடக்கப்பட்டாலும் இனி பயனில்லை! மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்.. |

நாடு முழுவதும் உடனடியாக முடக்கப்பட்டாலும் அடுத்த 10 நாட்களில் உருவாகப்போகும் பாதிப்புக்களை தவிர்க்க முடியாது. வைத்திய நிபுணர்கள், நாட்டின் ஒட்டுமொத்த மருத்துவ துறையும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர்.

டெல்டா மாறுபாடு எந்த மாகாணங்களில் பரவியது என்பதை அடையாளம் காண வைத்தியர்கள் தற்போது வரிசைப்படுத்தலை அதிகரித்துள்ளனர் என்பதோடு, டெல்டா பிளஸ் குறித்த ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றனர் என சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்டா மாறுபாடு மிகவும் அதிகமாக இருக்கும்போது டெல்டா மாறுபாடு இயற்கையாக உருமாறும்போது டெல்டா பிளஸாக மாற்றமடையுமென தெரிவித்துள்ள அவர்கள், இலங்கையில் இது இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும்,

மருத்துவர்கள் விழிப்புடன் நிலைமையை கண்காணித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளனர். தற்போது டெல்டா மாறுபாடு தான் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பை ஏற்படுத்தியிருப்பதாக மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.

அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களின்படியும் ஒரு நாளைக்கு 2,500 முதல் 2,800 நோயாளிகள் என மதிப்பிடப்பட்டாலும், அந்த எண்ணிக்கை 4,000 ஆகக் கூட இருக்கலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இப்போது பதிவாகியிருப்பது சுமார் 8 முதல் 10 நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை மாத்திரமே அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews