திடீரென மயங்கி விழுந்து மரணமான பெண்ணுக்கு கொரோணா தொற்று உறுதி….!

திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்த கர்ப்பவதி பெண் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, யாழ்.கஸ்த்துாரியார் வீதியை சேர்ந்த 30 வயதான குறித்த கர்ப்பவதி பெண் திங்கள் கிழமை

திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து உடனடியாகவே யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,

அவர் முன்னதாகவே உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருடைய சடலத்தின் மீது நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில்

அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. சம்பவம் தொடர்பான இறப்பு விசாரணையை 

திடீர் இறப்பு விசாரணை நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்தார். உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலத்தை சுகாதார நடைமுறைகளின் கீழ்  தகனம் செய்ய திடீர் இறப்பு விசாரணை அதிகாரி அறிக்கையிட்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews