மேலும் ஏழு நாடுகளை பசுமை பட்டியில் இணைத்தது பிரித்தானியா!

அதிகரித்து வரும் கோவிட் தொற்று காரணமாக நாடுகளுக்கு இடையில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரித்தானியா பசுமைப்பட்டியலில் மேலும் ஏழு நாடுகளை சேர்த்துள்ளது.

ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்லோவேனியா, ஸ்லோவாக்கியா, லாட்வியா, நோர்வே மற்றும் ருமேனியா ஆகிய நாடுகள் பசுமைப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் அம்பர் பிளஸ் பட்டியலில் இருந்து அம்பர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஜூலை 19 நிலவரப்படி, அம்பர் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கோவிட் தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றிருந்தால் தனிமைப்படுத்தலுக்கு உட்பட தேவையில்லை.

இது பிரான்சுக்கு பயணிக்கும் பிரித்தானியர்களின் எழுச்சியைத் தூண்டும் என்று கருதப்படுகிறது. அந்த வகையில், இன்றிலிருந்து, பிரான்ஸ் தொழில்நுட்ப வெளியீட்டின் வரம்பை விரிவுபடுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இங்கிலாந்தில் கோவிட் உயிரிழப்புகள் ஒரு வாரத்தில் 15 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் கோவிட் தொற்றினால் மேலும் 25,161 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்படி நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,094,243 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 130,357 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 1,296,101பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 870 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக,4,667,785 பேர் பூரண குணமடைந்துள்ளனர்

Recommended For You

About the Author: Editor Elukainews