2 லீற்றர் எரிபொருள் கேட்டதற்காக 2 பிள்ளைகளின் தந்தையான வாடகை வாகன சாரதியை அடித்து சித்திரவதை செய்த பொலிஸார்!

பொலிஸாருடைய வாகனங்களுக்கும், அந்த வாகனங்களில் இருந்த கொள்கலன்களிலும் எரிபொருள் நிரப்பபடுவதை கண்டு தனக்கும் 2 லீற்றர் எரிபொருள் வழங்குமாறு கேட்ட வாடகை வாகன சாரதியை பொலிஸார் அடித்து சித்திரவதை செய்த சம்பவம் மக்கோனா பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.

சம்பவத்தில் 2 பிள்ளைகளின் தந்தையான சமந்த ராஜபக்ஸ (வயது 49) என்பவர் படுகாயமடைந்த நிலையில் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

அவரது கணுக்கால், கால், தோள்பட்டை, விதைப்பை, உதடு மற்றும் காதுக்கு அருகில் என சுமார் 15 இடங்களில் காயங்கள், கீறல்கள் மற்றும் வீக்கங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர் கூறுகையில்,

நான் ஒரு டாக்ஸி டிரைவர். மக்கொன சிபெட்கோ எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் 20 ஆம் திகதி முதல் பெற்றோலுக்காக காத்திருந்தேன். ஆனால் பெட்ரோல் கிடைக்கவில்லை. கடந்த 24ஆம் திகதி இரவு,

பொலிஸ் ஜீப் நிறுத்தப்பட்டு, கேன்கள் மற்றும் அதிக மோட்டார் சைக்கிள்களுக்கு பெற்ரோல் வழங்கப்பட்டு கொண்டிருந்தது . நானும் 2 லிற்றர் பெற்றோல் கேட்டேன். அங்கிருந்த பொலிசார் என்னை அடித்து

ஜீப்பில் ஏற்றிக்கொண்டு பயாகல பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று கொடூரமாக தாக்கினார். அன்றிரவு இரண்டு பொலிஸ் அதிகாரிகள் என்னை அறையிலிருந்து வெளியே அழைத்துச் சென்று,

கைத்தடியை பற்களுக்கு இடையில் வைத்து விட்டு கடுமையாக தாக்கினர் என சமந்த ராஜபக்ஷ வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் நேற்று (25) மாலை களுத்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இது தொடர்பில் பாணந்துறை மனித உரிமைகள் அலுவலகத்திலும் சமந்த ராஜபக்ஷ முறைப்பாடு செய்துள்ளார். பாணந்துறை வைத்தியசாலை பொலிஸார் வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews