ஹரீன் பெர்னாண்டோவின் தேசியப்பட்டியல் ஆசனத்தினை கோரும் ஐக்கிய மக்கள் சக்தி.

ஹரீன் பெர்னாண்டோ நாடாளுமன்றத்திற்கு தெரிவான தேசியப்பட்டியல் இடத்தை மீண்டும் ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஒப்படைக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹா கோரிக்கையை விடுத்துள்ளார்.

தேசியப்பட்டியலை கொண்டே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறையிலிருந்து வெளியே வந்ததும் அவரை நாடாளுமன்றத்திற்கு பரிந்துரைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் வெற்றிடமாகியுள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் ஊடாக ஹரீன் பெர்னாண்டோ நாடாளுமன்றுக்குள் வரலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்துரைத்துள்ள ஹரின் பெர்னாண்டோ, நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவை பதவி விலகக்கூறலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நளின் பண்டார விரும்பினால், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதன் தலைவரின், தேர்தல் பிரசாரம் செய்ததற்காக தனக்கு செலுத்த வேண்டிய நிதியின் தொகையை அவரிடம் காட்ட முடியும் என்றும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews