யாழ்.நகரில் அதிபர்கள், ஆசிரியர்கள் கவனயீர்ப்பு பேரணி…!

கொத்தலாவல சட்டமூலத்தை கிழித்தெறி, அதிபர், ஆசிரியர்களின் 24 வருடகால சம்பள முரண்பாட்டை நீக்கு, கல்விக்கான நெருக்கடியை நீக்கு என பல கோரிக்கைகளுடன் யாழ்.நகரில் அதிபர்கள், ஆசிரியர்கள் கவனயீர்ப்பு பேரணி ஒன்றை நடாத்தியிருக்கின்றனர்.

நாடு முழுவதும் இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக யாழ்.நகரில் வாகன பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. முற்றவெளியில் இருந்து ஆரம்பித்து யாழ்.நகர வீதி வழியாக யாழ்.மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது.

வாகன பேரணியானது ஆரம்பமாகி நகரை அடைந்தபோது போலீசார் மற்றும் சுகாதாரப் பிரிவினர் குறித்த பேரணி நடாத்த முடியாது என தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனாலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சமூக இடை வெளி பேணி தொடர்ந்து செல்வதாக தெரிவித்து குறித்த வாகன பேரணி தொடர்ந்தது.

Recommended For You

About the Author: Editor Elukainews