பிரதமர் அலுவலகத்தின் தற்போதைய நிலைமை

இலங்கை பிரதமரின் அலுவலகம் தற்போது போராட்டகாரர்களின் முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் மக்கள் போராட்டம் காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

நேற்யை தினம் பதவி விலகுவதாக அறிவித்திருந்த போதிலும் ஜனாதிபதி பதவி விலகவில்லை. மாறாக பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நியமித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த போராட்டகாரர்கள் கொழும்பு 7 ப்ளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது.

பாதுகாப்பு தரப்பினர் கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர்தாரை பிரயோகம் மேற்கொண்டிருந்த போதிலும், அத்தனை தடைகளை தாண்டியும் பிரதமர் அலுவலகத்தை போராட்டகாரர்கள் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர்.

பிரதமர் அலுவலகத்தில் போராட்டகாரர்கள் கூடியுள்ளனர். ஏற்கனவே ஜனாதிபதி மாளிக்கை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகை என்பன போராட்டகாரர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.

அதேபோன்று நேற்றைய தினம் நாடாளுமன்றத்திற்குள்ளும் போராட்டகாரர்கள் பிரவேசிக்க முற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews